வெற்றிப்பாதை நடத்தும் பரிசுப்போட்டி

a Rafflecopter giveaway

Thursday, April 26, 2012

தம்புள்ளயில் பள்ளிவாசல் உடைப்புக்கு எதிர்ப்பு: மட்டு - அம்பாறையில் முழுநாள் நிர்வாக முடக்கம்

தம்புள்ளயில் அண்மையில் முஸ்லிம் பள்ளிவாசல் மீது சிங்கள பௌத்த தேரர்களால் தாக்குதல் நடத்தப்பட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து இன்று (26) நிர்வாக முடக்கத்தில் ஈடுபட்டுள்ளன.
அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து முஸ்லிம் பிரதேசங்களிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் பொது போக்குவரத்து சேவைகள் எதுவும் இடம்பெறவில்லை.
வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை முஸ்லிம் பிரதேசங்களை அண்டியுள்ள தமிழ் வர்த்தகர்களும் தமது வர்த்தக நிலையங்களை செயற்படுத்தவில்லை.
பாடசாலைகள், அரச அலுவலகங்கள், வங்கிகள் என்பனவும் இயங்கவில்லை. நகர் பிரதேசங்களில் மக்களின் நடமாட்டமும் வெகுவாக குறைந்துள்ளது. அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்க பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

 

0 comments:

Post a Comment

Followers